சாயா சோமேஸ்வரர் கோயில்
பொ.ச. 11 மற்றும் 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்துக் கோயில்சாயா சோமேசுவரர் கோயில் சாயா சோமேசுவர சுவாமி ஆலயம் என்றும் அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் தெலங்காணாவின் நல்கொண்டா மாவட்டத்தில் பனகாலில் அமைந்துள்ள ஒரு சைவ இந்து கோவில் கோவிலாகும். இந்தக் கோவிலில் மூன்று கருவறை உள்ளது. இது கோயில் கட்டிடக்கலை வடிவமாகும். இது திரிகூடலாயம் என்று அழைக்கப்படுகிறது. இவை சிவன், திருமால், சூரியன் ஆகியோருக்கு அர்ப்பணிக்கப்பட்டவை. மூன்று சிவாலயங்களும் சிக்கலான செதுக்கப்பட்ட தூண்களுடன் ஒரு பொதுவான மண்டபத்தை பகிர்ந்து கொள்கின்றன. இந்த சிற்பங்கள் மகாபாரதம், இராமாயணம் போன்ற புராணங்களின் காட்சிகளை சித்தரிக்கின்றன. இந்தக் கோயிலின் விமானம் பிரமிடுகளை ஒத்துள்ளது, இது பொ.ச. 11 மற்றும் 12 ஆம் நூற்றாண்டுகளில் பனகால் பிராந்தியத்தில் தெலுங்குச் சோடர்கள்|குண்டூரு சோழர்களும், காக்கத்தியப் பேரரசின் முதலாம் பிரதாபருத்திரன் ஆகியோரின் காலத்தில் கட்டப்பட்டது. இந்தக் கோயில் மகா சிவராத்திரியின் போது பிரபலமான புனித யாத்திரை தலமாக விளங்குகிறாது. பிரதானக் கோவிலில் சிவலிங்கத்தின் மீது நாள் முழுவதும் ஒரு நித்திய நிழல் இருப்பதால் இந்த கோவிலுக்கு அதன் பெயர் வந்தது.